திருவள்ளூர்:அடுத்து திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இந்த திருக்கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டுச் செல்கின்றனர்.
பக்தர்கள் அனைவரும் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தப்படும் உண்டியல் பணம், இதேபோல் திருத்தணி முருகன் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் கோயில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோயில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் திருக்கோவில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.