திருவள்ளூர்: திருத்தணியில் முருகனின் ஐந்தாம்படை வீடாகச் சிறந்து விளங்கும் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா நாளை (ஆகஸ்ட் 1) தொடங்க உள்ளது.
இந்த திருவிழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக் கோயிலில் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பாக்கப்படுகின்றது.
பக்தர்களின் வருகையால் கரோனா பரவல் அதிகரிக்கும் என்ற இடர் நிலவியது. இதனையடுத்து இந்து அறநிலைத் துறை உத்தரவின்பேரில் திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இன்றுமுதல் (ஜூலை 31) ஆகஸ்ட் 4ஆம் தேதிவரை ஐந்து நாள்கள் நடைபெறும் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளது.