கரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருத்தணி நகரில் வசிக்கும் திருநங்கைகள் அன்றாட உணவுக்கே கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருநங்கைகளுக்கு நிவாரண உதவி அளித்த திருத்தணி எம்.எல்.ஏ - thiruvallur latest news
கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த திருநங்கைகளுக்கு திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரன் நிவாரண உதவி அளித்தார்.
![திருநங்கைகளுக்கு நிவாரண உதவி அளித்த திருத்தணி எம்.எல்.ஏ திருநங்கைகளுக்கு நிவாரண உதவி அளித்த திருத்தணி எம்.எல்.ஏ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12092285-thumbnail-3x2-mla.jpg)
திருநங்கைகளுக்கு நிவாரண உதவி அளித்த திருத்தணி எம்.எல்.ஏ
இது குறித்து தகவலறிந்த திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சந்திரன் தனது சொந்த செலவில் 25 கிலோ அரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு தலா ஒரு கிலோ எண்ணெய் பாக்கெட், காய்கறிகள் என தலா ஒருவருக்கு ரூ.2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான தொகுப்பை 27 திருநங்கைகளுக்கு நிவாரணமாக வழங்கினார்.
இதையும் படிங்க : பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்ப உத்தரவு; மாணவர் சேர்க்கை எப்போது?