தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்ப்பிணிக்கு மாற்று மருந்து தடவிய செவிலியர் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி - thiruthani pregnant

திருவள்ளூர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது செவிலியர் மாற்று மருந்து தடவியதால் வயிற்றில் கொப்பளம் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாற்று மருந்தை தடவிய செவிலியர்கள்
மாற்று மருந்தை தடவிய செவிலியர்கள்

By

Published : Mar 18, 2020, 10:05 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஆனந்தி. எட்டு மாத கர்ப்பிணியான இவர், மாதாந்திர ஸ்கேன் பரிசோதனைக்காக பூனிமாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றனர்.

அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்த அரசு செவிலியர், கவனக்குறைவாக கைபேசியில் பேசிக்கொண்டே மாற்று மருந்தை வயிற்றுப் பகுதியில் தடவியதாகக் கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணி வயிறு பகுதியில் கொப்பளம் ஏற்பட்டுள்ளது.

மாற்று மருந்தை தடவிய செவிலியர்கள்

தற்போது, திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அந்த கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணிக்கு கவனக்குறைவாக ஸ்கேன் செய்த செவிலியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரசவ வலியால் துடித்து கர்ப்பிணியை தோளில் சுமந்துச் சென்ற எம்.எல்.ஏ.

ABOUT THE AUTHOR

...view details