திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமைதோறும் 'அஷ்ட தல பாத பத்ம' ஆராதனை சேவை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று நடைபெற்ற பூஜையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
நடு சாலையில் எடப்பாடியை திகைக்க வைத்த எம்எல்ஏ! - TamilNadu Chief Minister Edapadi Palanisamy
திருவள்ளூர்: திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடு பழனிசாமியை திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் பொன்பாடி சோதனைச்சாவடி அருகே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
![நடு சாலையில் எடப்பாடியை திகைக்க வைத்த எம்எல்ஏ!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3406320-thumbnail-3x2-t.jpg)
சாமி தரிசனத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வருகையை தெரிந்துகொண்ட திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம். நரசிம்மன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்பாடி சோதனைச்சாவடி அருகே வரும்போது, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதில் ஏராளமான அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.