திருவள்ளூர்:திருநின்றவூர் அருகே நடுகுத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரின் மனைவி கனிமொழியுடன் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவல் தெரிந்து மதன் பலமுறை செந்திலை எச்சரித்தும் தொடர்ந்து தொடர்பைத் துண்டிக்காமலிருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன் அவனது கூட்டாளிகளுடன் செந்திலைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த செந்திலை வழிமறித்து மதன் மற்றும் அவரது கூட்டாளிகளான அருண் பாபு, ரியாஸ் உள்பட மூவர் சேர்ந்து செந்திலின் தலை, முகம், கை, வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பியோடினர்.