கரோனா பாதிப்பு காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டதையடுத்து, தற்காலிக காய்கறி சந்தை திருமழிசையில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதனடிப்படையில், திருமழிசையில் காய்கறி விற்பனைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்த விற்பனை சந்தை பயன்பாட்டுக்கு வந்தது.
இதனை சிஎம்டிஏ, செயலாளர் கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதன் மூலம் திருமழிசை சந்தை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தற்காலிக சந்தை தொடங்கியதையடுத்து வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருள்கள் வரத் தொடங்கியுள்ளன. மேலும்,