திருவள்ளூர்:பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் அமைந்துள்ள ஸ்ரீசீதளாம்பிகா சமேத மனோனு கூலேஸ்வரர் எனும் குளிர்ந்த நாயகி சமேத ஸ்ரீ ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் அமைந்துள்ள ஸ்ரீசீதளாம்பிகா சமேத மனோனு கூலேஸ்வரர் எனும் குளிர்ந்த நாயகி சமேத ஸ்ரீ ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல வரலாறு
கல்லணையைக் கட்டிய சோழ மன்னன் கரிகாலப்பெருவளத்தான், சிவ வழிபாட்டிற்காக இந்தத் தலத்தின் வழியாக ஒரு கோயிலுக்குச் செல்லும்போது, தனது யானையின் மீதேறிச் சென்றார்.
அப்போது யானையின் கால் ஒரு புதர்கள் அடர்ந்த கொடிகளுக்குள் சிக்கியது. அவற்றைக் கைகளால் களைய முயன்றும் முடியாததால், தன் வாளால் அவற்றை வெட்டினான். அப்போது, புதருக்குள்ளிருந்து ரத்தம் பீறிட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த சோழ மன்னன் கொடிகளை விலக்கிவிட்டுப் பார்த்தபோது, உள்ளே ஒரு சிவ லிங்கம் இருந்தது. அதைக் கண்டு பதறிப்போன மன்னன், லிங்கத்தை வெட்டி சிவபாவம் செய்த தனது வலக்கையை வெட்டி வீசினான்.
பெயர்க்காரணம்
அப்போது அவரது பக்தியைக் கண்ட சிவபெருமான், தனது தேவியுடன் காளை வாகனத்தில் காட்சியளித்து இழந்த அவரது கையை மீண்டும் பொருத்தினார் என்பது தல வரலாறு.
இதன் பொருட்டு 'கைதந்தபிரான்' என்று பெயரால் அழைக்கப்பட்டார். மன்னனுக்கு ஆறுதல் சொல்லியும், சிவனின் அடியார்களைப் பற்றிய கதைகளைச் சொல்லியும் மனதை குளிர்வித்தாள் அங்குள்ள அம்பிகை. எனவே, அவருக்கு 'குளிர்வித்த நாயகி' என்ற பெயர் ஏற்படலாயிற்று.
குடமுழுக்கு விழா
மகா கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 12ஆம் கால பூஜைகள் தொடங்கி, அங்குரார்ப்பணமும், சிவசூர்ய பூஜையும், மகா பூர்ணாஹுதியும், கலசங்கள் புறப்பாடும், மூல லிங்க ஜீவன்யாசமும் நடைபெற்றது.
விமரிசையாக ந்டைபெற்ற கும்பாபிஷேகம் இதனைத் தொடர்ந்து ராஜகோபுரம், விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், பிறகு 10.20 மணியளவில் பரிவாரங்கள், மூல லிங்க மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றன.
இந்த விழாவில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதியிலிருந்து பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்செய்தனர்.
இதையும் படிங்க: இந்துத்துவா இந்திய அரசியலமைப்பின் பிரதிபலிப்பே...! - மோகன் பகவத்