பெண்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கைது செய்யக் கோரி திருவள்ளூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமாவளவனின் உருவ பொம்மை எரிப்பு: பாஜகவினர் கைது! - திருமாவளவன் உருவபொம்மை எரிப்பு
திருவள்ளூர்: திருமாவளவனின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் திமுகவை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜக போராட்டம் நடத்திய இடத்திற்குச் செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனிடையே, திருமாவளவன் உருவ பொம்மையை பாஜகவினர் எரித்ததால் பரபரப்பு நிலவியது. மேலும், விதிமுறைகளை மீறி உருவ பொம்மையை எரித்ததால் பாஜக மகளிர் அணியினரை கைது செய்த காவல் துறையினர், திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.