திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருவள்ளூரில் இருந்து சென்னை வரை செல்லக்கூடிய மின்சார ரயில்கள், அரக்கோணம் ரயில்கள் ஆகியவை மழையால் சற்று காலதாமதம் ஆனது.
திருவள்ளூரில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி - train
திருவள்ளூர் : திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம்
திருவள்ளூரில் மழை
தொடர்ந்து, திருவள்ளூர் அடுத்த மணவாள நகர், திருவள்ளூர் ரயில் நிலையம், திருப்பாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் ஏரிகள், குளங்கள் நிரம்ப வேண்டும் என்றும், அப்போதுதான் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.