திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகனின் ஐந்தாம் படை வீடான அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
திருத்தணி 3ஆம் நாள் தெப்பத் திருவிழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம் - ஆடி கிருத்திகை
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம் செய்தனர்.
இதையொட்டி நேற்று மாலை நடைபெற்ற மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் படிகள் வழியாக மலை அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை வந்தடைந்தார். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் பெருமாள் எழுந்தருளியதைத் தொடர்ந்து அங்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
பின்னர் இரவு சினிமா புகழ் இன்னிசை வேந்தர் மருத்துவர் சங்கர் கணேஷ், பின்னணி பாடகி- இசையமைப்பாளர் ஜீவா வர்ஷினி இணைந்து வழங்கிய பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மூன்றாம் நாள் விழாவில் உற்சவர் ஏழு முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் .