தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் பைக் திருடிய மூன்று இளைஞர்கள் கைது - Kodaikanal Latest News

திண்டுகல் மாவட்டம் கொடைக்கானலில் பைக் திருடிய இளைஞர்கள் மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பைக் திருடிய 3 வாலிபர்கள் கைது
பைக் திருடிய 3 வாலிபர்கள் கைது

By

Published : Dec 19, 2020, 7:46 PM IST

திண்டுக்கல்:திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் ஆனந்தகிரியைச் சேர்ந்தவர் பரத். இவர் கடந்த 10ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கொடைக்கானல் காவல் துறையினரிடம் புகார் அளித்ததார்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சோதனை செய்த போது, வாலிபர்கள் மூவர் வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நடந்த விசாரணையில் அவர்கள் மூவரும் பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (21) ஜீவா (20), மேகவர்ணன் (20) எனத் தெரியவந்தது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இவர்கள் தங்கும் விடுதிக்கு அருகே தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பார்த்துள்ளனர். இதையடுத்து வாகனத்தின் சைட் லாக்கை உடைத்து திருடியது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஹைதராபாத் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் திருவள்ளூரில் கைது!

ABOUT THE AUTHOR

...view details