திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில் திருவள்ளூர் அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் (32) என்பதும், இவர் மீது ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.