திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் புன்னப்பாக்கம் ஜே.ஜே. நகர் பகுதியில் பிரபல ஷாலோம் திருச்சபைக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் கர்த்தரின் தோட்டம் என்ற பெயரில் பண்ணை இடம் உள்ளது.
இந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதியோர் இல்லம் செயல்பட்டுவந்தது. மேலும் இந்த இடத்தில் வேளாண்மை செய்துவந்துள்ளனர். மேலும் இன்று காலை நெற்பயிர் வைப்பதற்காக நிலத்தை சேடை செய்யும் பணியில் பாஸ்டர் தங்கச்சனுக்கு சொந்தமான டிராக்டர் மூலம் புட்லூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ரூபன் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் அந்த டிராக்டர் சேடையில் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் புன்னப்பாக்கம் வழக்கறிஞர் புஷ்பராஜ் டிராக்டர் உதவியைக் கொண்டு சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக ஓட்டுநராக ஒதிக்காடு ஊராட்சி எம்ஜிஆர் நகரைச் சார்ந்த முனுசாமி என்பவர் மகன் ஜெகதீஷ் வந்துள்ளார்.
இதனையடுத்து தான் கொண்டுவந்த டிராக்டரை வெளியில் நிறுத்திவிட்டு சேற்றில் சிக்கிக் கொண்ட டிராக்டரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்தது, இதில் சிக்கிக்கொண்ட ஜெகதீஷ் பலத்த காயமடைந்தார்.