திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ஸ்ரீஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். கூலி தொழிலாளியான இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், அகிலா, யஸ்வந்த் என்ற பிள்ளைகளும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதேபோல் நேற்றும் ரமேஷ் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இதில் மனமுடைந்த பூர்ணிமா தனது பிள்ளைகளான அகிலா மற்றும் யஸ்வந்த் அருகில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தைகளை கொன்று விட்டு இளம்பெண் தற்கொலை - teenager suicide
திருவள்ளூர் : திருத்தணி அருகே குடும்ப தகராறில் பிள்ளைகளை கொன்றுவிட்டு பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
ஊர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.