தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மத்திய அரசின் அடிமையாக மாநில அரசு உள்ளது' -  பிருந்தா காரத் - பிருந்தா காரத்

திருவள்ளூர்: மத்திய அரசின் அடிமையாக  மாநில அரசான அதிமுக அரசு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

Brinda Karat

By

Published : Oct 13, 2019, 11:06 PM IST

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்கான மாநில சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த மோடி அரசினால் இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால், பொதுமக்களின் மாத வருமான அளவு வெகுவாக குறைந்துவிட்டது. பணப்புழக்கம் அடியோடு குறைந்து தொழில் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசானது மத்திய அரசின் அடிமையாக உள்ளது. அதிமுக அரசுக்கென தனி செயல்பாடுகள் என்று எதுவும் இல்லை என்றார்.

இதையும் படிங்க:

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: அப்பட்டமாக பொய் பேசும் மோடி, அமித் ஷா - பிருந்தா காரத்

ABOUT THE AUTHOR

...view details