திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அரக்கோணம் சாலையில் முரளி என்பவருக்கு சொந்தமான உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் உள்ள சமையல் அறையில் வழக்கம்போல் சமையல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது 5 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு சமையல் அறையில் இருப்பதை கண்டதும் ஊழியர்கள் கூச்சலிட்டு ஓட்டம் பிடித்தனர். இவர்களை கண்ட வாடிக்கையாளர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.