தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் மாமியாரை கொன்ற மருமகன் போலீசில் சரண் - பொன்னேரி அரசு மருத்துவமனை

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் மாமியாரை கொலை செய்த மருமகன் போலீசில் சரணடைந்தார்.

Etv Bharatமாமியாரைக் கொன்ற மருமகன் போலீசில் சரண்
Etv Bharatமாமியாரைக் கொன்ற மருமகன் போலீசில் சரண்

By

Published : Jan 9, 2023, 10:42 AM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் வசித்து வந்தவர் கல்யாணி (60). கணவனை இழந்த கல்யாணிக்கு இரண்டு ஆண், மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் ஆனதால் கடைசி மகன் சி.டி. குமார் என்பவருடன் கல்யாணி வாழ்ந்து வந்துள்ளார்.

இளைய மகள் கஸ்தூரியின் கணவர் குப்பன்(47) குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கஸ்தூரிக்கும் கணவர் குப்பனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று முன் தினம் (ஜன.7) கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக கஸ்தூரி வழக்கம் போல் தனது தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

மனைவியை அழைத்துச் செல்வதற்காக வந்த கணவன் குப்பனுக்கும் மாமியார் கல்யாணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த குப்பன் கல்யாணியை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்த குப்பனை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மியூசிக் வகுப்புக்கு சென்ற 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

ABOUT THE AUTHOR

...view details