கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட வீட்டைவிட்டு யாரும் வெளியே வரக்கூடாது என அரசு அறிவித்ததை அடுத்து அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். கோடை வெயிலால் வீட்டுக்குள்ளேயே வாடி கிடந்த மக்களுக்கு இன்று பெய்த மழை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வெளுத்து வாங்கிய கோடை மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி! - The public is delighted by the heat and cooling of the heavy rain that lasted more than an hour
திருவள்ளூர்: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான பெரியகுப்பம், மணவாளநகர், ஈக்காடு, காக்களூர், புல்லரம்பாக்கம், பூண்டி, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, கடம்பத்தூர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வீட்டில் அடைந்து கிடந்த மக்கள் கோடை வெயிலின் தாக்கம் நீங்கி குளிர்ச்சி ஏற்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.