தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100க்கும் மேற்பட்டோர் அடையாளம் தெரியாத காய்ச்சலால் பாதிப்பு - பொதுமக்கள் பீதி!

திருவள்ளூர்: ஆவடியில் அடையாளம் தெரியாத காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதிப்படைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

aavadi

By

Published : Oct 19, 2019, 1:32 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்படைந்துவரும் நிலையில் இக்காய்ச்சல் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஆவடி அரசு மருத்துவமனை, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி அரசு மருத்துவமனை

இதுகுறித்து ஆவடி மக்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நேரத்தில் ஆவடி மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாகக் குப்பைகள் அள்ளப்படாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் அதிலுள்ள பிளாஸ்டிக் பைகளில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவிவருகிறது. கொசு ஒழிப்பிற்கு பல லட்சக்கணக்கில் பணம் செலவு செய்துவரும் ஆவடி மாநராட்சி குப்பைகளை அள்ள இதுவரை நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் படிங்க: டெங்குவிற்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு - பள்ளி நிர்வாகத்திற்கு 1 லட்சம் அபராதம்

ABOUT THE AUTHOR

...view details