திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் 170 பயனாளிகளுக்கு ஆடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை வகிக்க, ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கோதை, ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள் இதில், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரமணா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 164 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார்.
இந்நிலையில், 164 பயனாளிகளுக்கு மட்டுமே ஆடுகள் வழங்கப்பட்டதால் மீதமுள்ள 6 பேர் தங்களுக்கும் உடனடியாக ஆடு வழங்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் ரமணாவை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு: அதிமுக எம்எல்ஏ., மீது குற்றச்சாட்டு