கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அத்தியாவசிய பொருள்களான மளிகை, காய்கறிக் கடைகள் விற்பனை செய்ய அனுமதி அளித்தது.
தற்போது, கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதை தொடர்ந்து கடைகளில் விற்கும் நேரத்தை இரண்டு மணியிலிருந்து ஒரு மணியாக குறைத்துள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் இணைந்து அடாவடியாக வியாபாரிகளை மிரட்டி முழுமையாக கடை திறக்க விடாமல் மூட வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.