திருவள்ளூர்:ஊத்துக்கோட்டை அடுத்த தும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பருத்திமேனி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உடல் நலக் குறைவு, வயதுமூப்பு காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய ஆரணியாற்றின் நடுவே சுடுகாடு அமைந்துள்ளது. மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாலும், ஆபத்தான முறையில் தண்ணீரில் இறங்கி சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக பருத்திமேனி கிராமத்தைச் சேர்ந்த மோகனா என்ற மூதாட்டி வயது முதிர்வு காரணமாக
உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை ஆரணியாற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆற்று தண்ணீரில் மிகுந்த சிரமத்துடன் சடலத்தை சுமந்தபடி சுடுகாட்டிற்குச் சென்று இறுதி சடங்குகளை மேற்கொண்டனர்.