சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர், திருத்தணி பகுதியில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இந்நிலையில், அங்கிருந்து வீடு திரும்பும் வழியில், காக்களூர் பால் பண்ணை அருகே வந்து கொண்டிருந்த போது, அவர் மீது பால் வண்டி மோதி விபத்துக்குள்ளானது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.