திருவள்ளூர்: வீட்டின் இரும்புக் கதவிற்கு வெல்டிங் (welding) வைத்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் அண்ணா தெருவைச் சேர்ந்த தியாகு (35) என்பவர் எலக்ட்ரிஷன், ஓட்டுநர் வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டிற்கு அருகியில் வசிப்பவரின் வீட்டிற்கு இரும்புக் கதவு செய்யும் வகையில் வெல்டிங் வேலை பார்த்து வந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தியாகு மயக்கமடைந்துள்ளார்.