உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாட்டு அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 10 ஆயிரத்து 627 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 188 பேர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்து 547 பேர் 14 நாள்கள் தனிப்படுத்தல் முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர்.
மீதமுள்ள 3 ஆயிரத்து 892 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக அறிய முடிகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூரில் உள்ள மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கோவிட்-19 கண்டறிதல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 26 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.