தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்!

திருவள்ளூர்: குசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர்.

the New Bridge Opening process
the New Bridge Opening process

By

Published : Sep 17, 2020, 12:16 AM IST

திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை வரை செல்லக்கூடிய முக்கியச் சாலை வழியாக ஒதப்பை கிராமத்தில் குசஸ்தலை ஆற்றின் குறுக்கே பழமை வாய்ந்த மேம்பாலம் ஒன்று உள்ளது.

இந்த மேம்பாலத்தில் நீர்வரத்து அதிகமாகப் போகும் நிலையில் பழமை வாய்ந்ததாகக் காணப்படுவதால், தண்ணீர் அதிகமாக சென்றால் மக்கள் செல்லாதவாறு அடைக்கப்படும்.

அப்பகுதி மக்கள் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்திருந்தனர். அதனடிப்படையில், நெடுஞ்சாலைத் துறையினர் ரூ.11.6 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை நேற்று (செப்.16) தொடங்கினர்.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த பொறியாளர்கள் மண் பரிசோதனை மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details