தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆன்லைன் மருந்து விற்பனையை நெறிப்படுத்த வேண்டும்' - மருந்து வணிகர்கள் சங்கம் கோரிக்கை - Medplus Apollo

திருவள்ளூர்: ஆன்லைன் மருந்து விற்பனை முறையில் அப்போலோ, மெட் பிளஸ் உள்ளிட்ட மருந்தகங்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படுவதாகவும், ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்துமாறும் கோரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மருந்து வணிகர்கள் சங்கம் கோரிக்கை
மருந்து வணிகர்கள் சங்கம் கோரிக்கை

By

Published : Aug 6, 2021, 4:59 PM IST

திருவள்ளூர்மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் 25 ஆண்டுகளாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், "கடந்த 20 ஆண்டுகளாக சங்கங்களின் வளர்ச்சிக்காக சேமிக்கப்பட்ட இரண்டு கோடி ரூபாயை முன்னாள் நிர்வாகிகள் கையாடல் செய்துள்ளனர்.

பிற மருந்தகங்களுக்கு பாரபட்சம்

மேலும், சங்கத்திற்கு கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை இதுவரை செய்து முடிக்கவில்லை. அப்போலோ, மெட் பிளஸ் உள்ளிட்ட மருந்தகங்களுக்கு மருந்து நிறுவனங்கள் கூடுதலாக 30 முதல் 35 விழுக்காடு வரை சலுகைகள் அளிக்கிறது.

மருந்து வணிகர்கள் சங்கம் கோரிக்கை

பிற மருந்தகங்களுக்கு 10 முதல் 15 விழுக்காடு மட்டுமே சலுகைகள் அளித்து மருந்து நிறுவனங்கள் பாரபட்சம் காட்டுகின்றனர்.

மேலும், ஆன்லைன் வர்த்தகத்தால் தங்கள் தொழில் நலிவுற்று வருகிறது. இதனால் ஆன்லைன் மருந்து விற்பனையை நெறிப்படுத்த வேண்டும்" எனக் கோரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மனுவை அளித்தனர்.

இதையும் படிங்க: 'சம்பளம் வழங்குவதில் திடீர் மாற்றம் - வருத்தத்தில் சித்த மருத்துவப் பணியாளர்கள்'

ABOUT THE AUTHOR

...view details