தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலை செய்த வீட்டில் நகைகளைத் திருடிய பெண்ணிடம் விசாரணை! - திருவள்ளூர் குற்ற செய்திகள்

மாங்காட்டில் வேலை செய்த வீட்டில் நகைகளைத் திருடிய பணிப்பெண், திருட்டுத் தொடர்பாக கைரேகை எடுக்கப் போவதாக காவல்துறையினர் கூறியதால் உண்மையை ஒத்துக்கொண்டார்.

நகைகளைத் திருடிய பணிப்பெண்
நகைகளைத் திருடிய பணிப்பெண்

By

Published : Feb 13, 2021, 6:29 AM IST

திருவள்ளூர்: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு (58), இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன், வேலூரில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி வீடு திரும்பினார்கள்.

இந்நிலையில், தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி பீரோவில் வைக்கும் போது, ஒரு வைர கம்மல், 4 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, மாங்காடு காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் மாங்காடு காவல்துறையினர், வெங்கடேஷ்வரலு வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது பீரோவின் கதவை யாரும் உடைக்கவில்லை என்பதை அறிந்தனர். தொடர்ந்து அந்த வீட்டில் வீட்டு வேலை செய்யும் அம்பிகா (31), என்பவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் திருட்டுத் தொடர்பாக கைரேகைகளை எடுக்க வேண்டும் எனக் காவல்துறையினர், கூறியதால் பயந்து போன அம்பிகா பீரோவில் இருந்து நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பீரோவின் சாவி தொலைந்து இருந்த நிலையில், மாற்று சாவி போட்டு இருந்ததாகவும், பீரோ திறந்து இருந்தபோது, ஒரு நகையை எடுத்ததாகவும், அதனை வீட்டுக்காரர்கள் கண்டுபிடிக்கவில்லை.

நகை அதிகளவில் இருந்ததால் கூடுதலாக நகை எடுத்தால் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்து நகையை திருடியதாகவும் வீட்டு உரிமையாளர் மகனின் திருமணத்திற்காக, மருமகளுக்கு போட வைத்திருந்த வைரக்கம்மலை எடுத்ததால் சிக்கிக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரிடமிருந்து வைரக்கம்மல், 4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்தனர்.

இதையும் படிங்க:போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்து பண மோசடி - 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details