திருவள்ளூர்: சி.வி. நாயுடு சாலையில் உள்ள மரம் அறுக்கும் பட்டறையில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு 15 டன் எடையுள்ள லாரி வெளியே வரும்போது நடுரோட்டில் பிரேக் டவுன் ஆகி நின்றதால் சென்னை முதல் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காலை 8 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பழைய டோல்கேட் காமராஜர் சிலை காக்களூர் சிக்னல் உள்ளிட்ட 2 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி வேலைக்குச்செல்வோர் இவ்விவகாரத்தில் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார், லாரி, பேருந்துகள், பள்ளிப்பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்துப்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பழுதான லாரியை சரி செய்யும் பணியில் மரம் அறுக்கும் பட்டறை ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.