தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா போதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய இளைஞர் - தலைமை காவலர் உயிரிழப்பு - Chennai Rajiv Gandhi Government Hospital

திருவள்ளூரில் கஞ்சா போதையில் இளைஞர் காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியதில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தலைமை காவலர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 4, 2022, 6:28 PM IST

திருவள்ளூர்: வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே கடந்த ஆக.31ஆம் தேதி கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் தாறுமாறாக காரை இயக்கி வந்த நிலையில் முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது அடுத்தடுத்து மோதியது.

அப்போது இருசக்கர வாகனத்தில் பணி முடித்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த ஆவடி காவல் நிலையத்தின் தலைமை காவலர் அப்புன்செல்வன், ஆட்டோ ஓட்டுநர் சத்யா மற்றும் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட பெண், இரண்டு குழந்தைகள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினர். இதில், தலைமை காவலர் அப்புன்செல்வன் மட்டும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்திருந்த நிலையில் இன்று (செப்.04) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

ABOUT THE AUTHOR

...view details