தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவின்றி தவிக்கும் மக்கள்: கைகொடுக்கும் தீயணைப்பு வீரர்கள்! - திருவள்ளூரில் உணவின்றி தவிக்கும் மக்கள்: கைகொடுக்கும் தீயணைப்பு வீரர்கள்

திருவள்ளூர்: ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு, தீயணைப்பு வீரர்கள் மூன்று நேரமும் உணவு வழங்குகின்றனர்.

பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தீயணைப்பு வீரர்கள்
பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தீயணைப்பு வீரர்கள்

By

Published : Apr 8, 2020, 2:11 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்திரவின் பேரில் செங்குன்றம் பகுதியில் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பலர் உணவின்றி தவித்து வரும் இந்த சூழலில் பொதுமக்களுக்குத் தேவையான உணவுகளை, தீயணைப்பு வீரர்களே சமைத்து பொதுமக்களுக்கு மூன்று நேரமும் வழங்கிவருகின்றனர்.

பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தீயணைப்பு வீரர்கள்

மேலும், தொற்று பரவுதலை தடுக்க அப்பகுதி மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கியும், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளித்தும் வருகின்றனர். தீயணைப்பு வீரர்களின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: 2 டிராக்டர் கிருமி நாசினி வழங்கிய மாதவரம் எம்.எல்.ஏ.

ABOUT THE AUTHOR

...view details