தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் காவலர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி! - திருவள்ளூரில் பெண் காவலர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி

திருவள்ளூர்: பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்
தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்

By

Published : Mar 9, 2020, 12:06 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி மீனா என்பவர் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவருகிறார். நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு காவல் நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டு கொண்டாடினர்.

இந்நிலையில், நேற்று மதியம் இசக்கி மீனா, காவல் நிலையத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்ட பணியிலிருந்த மற்ற காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

காவலர் கீழே குதித்ததில் கால் முறிவு மட்டும் ஏற்பட்டு நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். பின்னர், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்

மேலும், இசக்கி மீனா எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார், வேலைப்பளு காரணமா, வேறு ஏதேனும் காரணமா? எனக் காவல் துறையினர் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பணிச்சுமை: மன அழுத்தத்தில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details