தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேகமாக நிரம்பி வரும் பூண்டி நீர்த்தேக்கம் - விவசாயிகள் மகிழ்ச்சி! - The fast overflowing poondi reservoir

திருவள்ளூர்: தண்ணீரின்றி வறண்டு கிடந்த பூண்டி ஏரி நீர்த்தேக்கம், அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது.

பூண்டி நீர்தேக்கம்

By

Published : Sep 19, 2019, 7:45 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் குறித்து தெரிந்து கொள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து குழு ஒன்று பூண்டி நீர்தேக்கத்திற்குச் சென்று பார்வையிட்டது. அவர்களுடன் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இருவரும் சென்றிருந்தனர். அவர்களிடம் பொதுப்பணித்துறையினர் நீர்தேக்கம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.

பூண்டி நீர்தேக்கத்திற்கு வரும் மழைநீர்

அப்போது பொதுப்பணித்துறையினர் தரப்பில், 'நீர்த் தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள நாயக்கன்பாளையம், திருப்போரூர், பங்காருபேட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் கனமழைக் காரணமாக தண்ணீர் வரும். அதேபோல் தான் தற்போது வறண்டு காணப்பட்ட நீர்தேக்கம் கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நீர்த்தேக்கத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சுமார் 16 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது’ எனத்தெரிவிக்கப்பட்டது. பூண்டி நீர்தேக்கம் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகளும் சுற்றுவட்டார பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பூண்டி நீர்தேக்கத்தில் ஆய்வு செய்யும் குழுவினர்செ

ABOUT THE AUTHOR

...view details