திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பாக ரூபாய் 1.20 கோடி மதிப்பில் 4 அவசர சிகிச்சை ஊர்திகளை மாவட்ட ஆட்சியர் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார் .
திருவள்ளூரில் 4 அவசரகால சிகிச்சை ஊர்திகளை தொடங்கிவைத்த ஆட்சியர்! - Triuvallur District News
திருவள்ளூர்: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பாக ரூபாய் 1.20 கோடி மதிப்பில் 4 அவசர சிகிச்சை ஊர்திகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து தொடங்கிவைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பிவைத்தார்.
ரூபாய் 17 லட்சத்தில் அவசர ஊர்தி உடன் அதில் வைக்கப்பட்டுள்ள உயிர்காக்கும் உபகரணங்களின் மதிப்பு 13 லட்சம் என 30 லட்சம் மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டு, பூண்டி, மாத்தூர், திருமழிசை ஆகிய நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா அனுப்பிவைத்தார் .
இம்மாவட்டத்தில் ஆவடி, பாடியநல்லூர், திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் மூன்று அதிநவீன உயிர்காக்கும் அவசர ஊர்திகளும் 46 உயிர்காக்கும் அவசரகால ஊர்திகளும் உள்ள நிலையில், தற்போது நான்கு அவசரகால ஊர்திகள், இரண்டு சக்கர அவசர ஊர்திகள் என மொத்தம் 55 அவசர கால ஊர்திகள் உள்ளதாக ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.