திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயலில், கடந்த மார்ச் 21ஆம் தேதி, 10 வயது சிறுமியை ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர், பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியை மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்தார்.
இந்த கொடுஞ்சம்பவம் தொடர்பாக, சுரேஷ் மீது போக்சோ, கொலை வழக்குப் பதிவு செய்த மதுரவாயில் காவல்துறையினர், அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் இன்று (நவ. 19) விசாரணைக்குவந்தது. அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் கண்ணதாசன், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கவேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட மகிளா நீதிமன்ற நீதிபதி வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:சிறார் காதல் திருமணம்- காவல் துறை விசாரணை