திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் அதிமுக ஒன்றியம் சார்பில் பொன்னேரியில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர் பலராமன், தேர்தல் பொறுப்பாளர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும்நோக்கில் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் அதிக எண்ணிக்கையில் வாக்குகளை பெற வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.
அதேபோன்று கும்மிடிப்பூண்டி எளாவூரில் நடந்த கூட்டத்தில் கும்மிடிபூண்டி எம்எல்ஏ விஜயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் சேர்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். கூட்டம் நடந்த இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அப்பகுதியே களேபரமாய் காட்சியளித்தது.
அரசு விழாக்களுக்கு முறையாக கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட செயலாளர் பலராமன் சமரசம் மேற்கொண்டு கூட்டத்தை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:'இறுதி மூச்சு வரை சமூக சேவை' - சுப்பிரமணியன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்