திருவள்ளூர்: தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறு வழிப்பாதை அமைக்க அரசு, நிலத்தைக் கையப்படுத்திவருகிறது. குறிப்பாக, ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான தும்பாக்கம், பருத்திமேனி குப்பம், பேரண்டுர், பனப்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நஞ்சை நிலத்தைக் கையகப்படுத்தப்படுகிறது.
ஆனால் மாற்றுப்பாதையில் விவசாயத்தை அழிக்காமல் அரசின் தரிசு நிலம் உள்ளிட்டவை வழியாக ஆறு வழிப்பாதைத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என விவசாயிகள் கோரிக்கைவைக்கின்றனர்.