தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவடி அருகே அடுத்தடுத்து மூன்று கோயில்களில் கொள்ளை!

திருவள்ளூர்: ஆவடி அருகே அடுத்தடுத்து மூன்று கோயில்களில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

temple hundhy theft in thiruvallur

By

Published : Aug 30, 2019, 5:41 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் ஸ்ரீநாகத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு இரவு நேர பூஜையை முடித்து விட்டு பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை பூஜைக்காக பூசாரி கோயிலுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை உடைத்து பணம், அம்மன் கழுத்தில் இருந்த தாலி சயின் கொள்ளைபோனது தெரியவந்தது. இதேபோல அருகே உள்ள முனீஸ்வரன் கோயிலின் உண்டியல் பணமும், பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள அம்மன் கோயின் உண்டியல் பணம் மற்றும் அம்மன் தாலி சயின் கொள்ளையடிக்கப்பட்டன.

கொள்ளையடிக்கப்பட்ட கோவில்

இச்சம்பவம் குறித்து டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் கோயில்களின் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details