தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களின் பூட்டை உடைத்து அம்மன் தாலியைத் திருடிய கும்பல் - கோயில்களின் பூட்டை உடைப்பு

திருவள்ளூர்: அடுத்தடுத்த இரண்டு கோயில்களின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி, உண்டியல், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

temple amman's jewels theft
அம்மன் தாலியைத் திருடிய கும்பல்

By

Published : Mar 7, 2021, 3:45 PM IST

பொன்னேரி அடுத்த குமரஞ்சேரியில் அமைந்துள்ள முருகன் மற்றும் பொன்னியம்மன் கோயிலில் இன்று (மார்ச்7) காலை வழக்கம் போல பூஜை செய்வதற்காக பூசாரிகள் வந்துள்ளனர். அப்போது, கோயிலின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்த பூசாரிகள் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

இதில், அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதைப் போல முருகன் கோயிலிலும் உண்டியல் பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பட்டப்பகலில் சைக்கிள் திருடும் இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details