தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலும், காலியாக உள்ள 22தொகுதிகளில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும்ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனைமுன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் விழிப்புணர்வு குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.
100 விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து 3டி விழிப்புணர்வு பரப்புரை - collector Maheshwari ravikumar
திருவள்ளூர்: நாடாளுமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு உறுதி செய்யும் வகையில் 3டி விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
மேலும், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 100 விழுக்காடுவாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகள்நடத்தப்பட்டுவருகிறது. இதில் ஒரு அங்கமாக இன்று கிராமங்கள்தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3டிகாணொளி பரப்புரைவாகனத்தில் திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்திலிருந்து மாவட்ட தேர்தல் அலுவலர்மகேஷ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து தங்களது வாக்குரிமையை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்களிப்போம் என்று உறுதிமொழியை மகேஷ்வரி ரவிக்குமார் வாசிக்க கிராம வாக்காளர்அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில் தேர்தல் பணியில்உள்ளவர்கள்,கிராம வாக்காளர் கலந்துகொண்டனர்.