இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வகுப்பறை பாடம் தாண்டி வாழ்க்கை பாடத்தையும் மாணவர்களுக்கு புகட்டி அவர்களுக்கான வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற பள்ளியில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்! - teachers day celebration
திருவள்ளூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை அவர் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இத்தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் படித்த திருத்தணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் அவரின் முகமூடியை அணிந்து இத்தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பள்ளி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த இப்பள்ளியின் தலைமைஆசிரியர் சுமதி, "அவர் படித்த பள்ளியிலே பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அதே நேரத்தில் பள்ளியின் முன்னேற்றத்துக்கு அவர் வழிகாட்டியது போன்றே எங்களது பணியையும் அர்ப்பணிப்போடு செய்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.