திருவள்ளூர்:அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சமீபகாலமாக அரசு பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்வது, வகுப்பறையில் நடனம் ஆடுவது, ஆசிரியர்களை மிரட்டுவது உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருவூர் அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் ஒழுங்கீனமாக முடிவெட்டி இருந்த மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு தலைவர் அருணன் முன்னிலையில் மாணவர்களுக்கு மிலிட்ரி கட்டிங் செய்து மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு 'மிலிட்ரி கட்டிங்' வெட்டிய ஆசிரியர்கள்! - திருவூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஹெர் கட் செய்த ஆசிரியர்கள்
திருவூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு முடி திருத்தும் பணிகள் மேற்கொண்ட அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
மிலிட்ரி கட்டிங்
திருவூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஹெர்கட் செய்த அப்பள்ளியின் ஆசிரியர்களின் செயலுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க; கலைகள் மூலம் மனிதம் வளர்க்கும் கூடல் கலைக்கூடம்!