தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் வணிக வளாகம், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் மே 7ஆம் தேதி அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, அரசியல் கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் கடைகளை மூட ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் மே 16ஆம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 77 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
ஒரு மணி நேரத்துக்கு 50 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் மதுபான வாங்க வருபவர்கள் குடையுடன் வரவேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படியே மதுப் பிரியர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து குடையுடன் வந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க:வேகத்தடை அமைத்ததால் இரு சமூகத்தினரிடையே மோதல் - 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை