திருவள்ளூர்:செங்குன்றம் சாலை வீரராகவர் கேஸ் குடோன் எதிரே நின்று கொண்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தின் மீது சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற சமையல் கேஸ் டேங்கர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில், டாடா ஏஸ் வாகன உரிமையாளர் பால்ராஜ், லாரி ஓட்டுநர் இருவரும் காயமடைந்தனர்.
108 ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்தும், குறித்த நேரத்தில் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த இளைஞர்கள் காயமடைந்த இருவரையும் ஆட்டோவில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.