தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுவருகிறது. இந்நிலையில், தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருவள்ளூரில் கரோனா தடுப்பூசி செலுத்துபவர்களை நேரில் பார்வையிட்ட "ஆளுநர் பன்வாரிலால் புரோகித்" தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திருவள்ளூர் மாவட்டம் கனகம்மா சத்திரம் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்துபவர்களை பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை:
அப்பொழுது தடுப்பூசி போடும் நபரிடம் அவர் கூறியதாவது, "நானே இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். தடுப்பூசி போடுவதால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் வராது, தமிழ்நாட்டில் மே. 1ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்குமேல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை" என்று கூறினார்.
இதில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவக் குழுவினர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'கரோனா தடுப்பூசி வீண் செய்ததில் தமிழ்நாடு முதலிடம்'