திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறு, குறு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் உள்ளிட்டவைகள் வழங்குவதற்காக முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அனைத்து வங்கிகளின் சார்பில் 466 பேருக்கு சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் மகேஷ் ரவிக்குமார் வழங்கினார்.
சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி! - all bank provide rent help 466 small scale entrepreneurs in Thiruvallur
திருவள்ளூர்: சிறு, குறு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 466 பேருக்கு சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து வங்கிகள் சார்பில் கடனுதவி வழங்கப்பட்டது.
சிறு குறு தொழில் முனைவோர்கள் 466 பேருக்கு கடனுதவி வழங்கிய அனைத்து வங்கிகள்
இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர். இதில் 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 466 பேருக்கு உடனடியாக கடனுதவிகளை இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளை சேர்ந்த அலுவலர்கள் வழங்கினர்.
இதையும் படிங்க: ஒளிப்பதிவாளரைத் தாக்கி செல்போன் பறித்த வழிப்பறி கும்பல்!