தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வெற்றிவேல் யாத்திரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கவிருந்த இந்த யாத்திரை திருச்செந்தூரில் டிசம்பர் 6ஆம் தேதி முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கரோனா அச்சுறுத்தல் காரணமாக வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தகவலளித்த தமிழ்நாடு அரசு, கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்தது.