தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு! - பழவேற்காடு பறவைகள் சரணாலயம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பறவைகள் சரணாயலத்தை படகில் சென்று தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று(ஜூலை.24) ஆய்வு செய்தார்.

minister
minister

By

Published : Jul 25, 2021, 7:36 AM IST

திருவள்ளூர்: தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று(ஜூலை.24) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வெங்கல் அடுத்த சீத்தஞ்சேரியில் உள்ள காப்புக்காடுகள், மாதர்பாக்கம் பகுதியில் உள்ள காப்புக்காடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து மரங்களின் தன்மைகள் குறித்து வனத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தை படகில் சென்று ஆய்வு செய்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமசந்திரன், “பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் கடந்த ஆண்டு 62 வகையான பறவைகள உள்ளது. நவம்பர் முதல் ஏப்ரல் வரையில் பழவேற்காடு சரணாலயத்திற்கு 20 ஆயிரம் பறவைகள் வந்து சென்றுள்ளன. கடல் ஆமைகள் இன விருத்தியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பறவைகள் சரணாலய எல்லைக்குள் 13 கிராமங்கள் இருக்கிறது. அவர்கள் கட்டுமான பணிகள் உள்ளிட்டவை செய்ய சிரமம் இருப்பதாக மக்கள் புகார் செய்துள்ள நிலையில், முதலமைச்சர் ஒத்துழைப்போடு சிரமங்கள் களையப்படும். ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்று தீர்வு காணப்படும்.

கடல் எல்லையில் ஜீரோ முதல் 10 கி.மீ.வரை சரணாலய எல்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, ஜீரோ பாயிண்டியேலே சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அழியும் நிலையில் உள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்கப்படும்.

மேலும், கடல்வாழ் உயிரினங்களின் உணவான கடல்புழுக்களை கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு செம்மரங்கள் வெட்ட செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்பட்டு வருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 3ஆவது நாள் அட்டவணை: ஏழு போட்டிகளில் இந்திய வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details