தமிழ்நாட்டின் ஊராட்சி மன்றத் தலைவர்கள்:
தமிழ்நாடு அளவில் 12ஆயிரத்து, 524 ஊராட்சித் தலைவர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சித் தலைவர்களும், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மட்டும் 61 ஊராட்சித் தலைவர்களும் உள்ளனர்.
இவர்கள் உள்ளாட்சித் துறை சார்பாக ஊராட்சி நிர்வாகத்தை வழிநடத்திவரும் நிலையில் உள்ள 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறையினரால் கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட, ஊராட்சித் தலைவர்களில் சிறந்த 10 ஊராட்சித் தலைவர்களை நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் 'முத்தமிழ் கலை சங்க அறக்கட்டளை' தேர்வு செய்துள்ளது.
'தமிழ் மாமணி சிறந்த மாமனிதர்கள் விருது':
தேர்வு செய்யப்பட்ட ஊராட்சித் தலைவர்களுக்கு 'தமிழ் மாமணி சிறந்த மாமனிதர்கள் விருது', சான்றிதழும் வரவிருக்கும் (மார்ச். 20) அன்று கவிஞர் இரண்டாம் இளங்கோவால் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய பாதிரிவேடு ஊராட்சித் தலைவர் என்.டி மூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
தேர்வு செய்யப்பட்ட பாதிரிவேடு ஊராட்சித் தலைவர் என்.டி மூர்த்திக்கு கும்மிடிப்பூண்டி தலைவர் கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக கூட்டமைப்பு சங்கத் தலைவர் எஸ்எம்ஆர் ரவி, ஊராட்சியை சேர்ந்த கிராம மக்களும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:கலைமாமணி விருதுகளை வழங்கும் முதலமைச்சர்